" alt="" aria-hidden="true" />
சென்னையில் இனி PREPAID கரண்ட் பில் பொருளாதார நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த திட்டம் இன்று செயல்படுத்தப்படாமல் கிடப்பிலேயே போடப்பட்டது...
இந்த நிலையில், சிக்கலில் உள்ள மின்சாரத் துறையின் நிதியினை மேம்படுத்தவும், அதோடு மின்சார துறையில் உள்ள சிக்கல்களை மேம்படுத்தவும் இந்த "ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்" திட்டத்தினை தேசிய ஜன நாயக கூட்டணியிலான அரசாங்கம் அடுத்த 2022ம் ஆண்டுக்குள் கட்டாயம் இத்திட்டத்தினை செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
24/7 மணி நேரம் மின்சாரத்திற்கு முயற்சி
மத்திய மின்சார துறை ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள இந்த திட்டமானது, இடையில்லா மின்சார வினியோகத்தின் ஒரு திட்டமாகும். எனினும் தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்த புதிய அரசு 24/7 மணி நேரமும் அனைவருக்கும் தடையில்லா மின்சாரத்தினை வழங்கும் நோக்கத்தில் இத்திட்டத்தினை முடுக்கி விட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
*எதற்கு ஸ்மார்ட் மீட்டர்*??
இந்த "ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர்" ஆனது, மின்சாரம் திருட்டு, மின் கட்டண பில்களில் குளறுபடி உள்ளிட்ட புகார்கள் மற்றும் குறைபாடுகளை தடுக்கும் நோக்கில், நாடு முழுவதும், முன்பே பணம் செலுத்தி, பயன்படுத்தும் வகையிலான, 'பிரீபெய்டு' மின் கட்டண மீட்டர் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு ப்ரீபெய்ட் ஸ்மார்ட் மீட்டர் மனித அளவீட்டு பில்லிங் மற்றும் சேகரிப்பது குறித்தான செயல்பாட்டினைக் குறைக்கிறது. இதனால் இது திருட்டை அடையாளம் காண முடியும் என்றும் கருதப்படுகிறது.
வட இந்தியாவில் உள்ள டெல்லி, உ பி,
உள்ளிட்ட சில மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது