மத்திய அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள்

" alt="" aria-hidden="true" />


மத்திய அரசுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வேண்டுகோள்


நாடு முழுதும் 21 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை எளிய மக்களுடைய வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க அரசு செய்ய வேண்டிய 10 கடமைகள் இதோ: 


1. பிரதமர் கிசான் திட்டத்தில் தரும் உதவித் தொகையை ரூ 12,000 ஆக உயர்த்தி உடன் வழங்க வேண்டும்.


2. குத்தகை விவசாயிகளின் பட்டியல்களை மாநில அரசுகளிடமிருந்து பெற்று ஒவ்வொரு குத்தகை விவசாயின் குடும்பத்திற்கும் ரூ 12,000 உடன் வழங்க வேண்டும்.


3. மகாத்மா காந்தி வேலைத் திட்டத்தில் பதிவு செய்துள்ள ஒவ்வொருவருக்கும் 
ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.


4. ஜன் தன் திட்டம் அதனை ஒத்த முந்தைய திட்டங்களில் தொடங்கப்பட்ட வங்கிக் கணக்குகள் (நகர்ப் புற வங்கிக் கிளைகளில் மட்டும்) ஒவ்வொன்றுக்கும் ரூ 3,000  உடன் வழங்க வேண்டும்.


5. ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 10 கிலோ அரிசி அல்லது கோதுமை இலவசமாக உடன் வழங்க வேண்டும்.


6. ஏதாவது ஒரு சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள தொழில் உரிமையாளர் அனைவரும் தற்போதுள்ள வேலைகளயோ ஊதியத்தையோ குறைக்கக் கூடாது என்று கட்டளையிட்டு அவர்கள் தருகின்ற ஊதியத்தை அரசு 30 நாட்களுக்குள் ஈடு செய்ய வேண்டும்.


7. மேற்கூறிய இனங்களில் அடங்காதவர்களுக்கு, ஒவ்வொரு வார்டிலும் ஒன்றியத்திலும் பதிவு அலுவலகம் திறந்து அத்தகைய ஏழைகளைப் பதிவு செய்து ஒவ்வொருவருக்கும் வங்கிக் கணக்கு திறந்து அக்கணக்கில் ரூ 3,000 உடன் வழங்க வேண்டும்.


8. எல்லா வகையான வரிகளையும் கட்டுவதற்கு இறுதி நாளை 30-6-2020 க்கு ஒத்தி வைக்க வேண்டும்.


9. வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய மாத தவணை (EMI) இறுதி நாட்களை 30-6-2020க்கு ஒத்தி வைக்க வேண்டும்.


10. மக்களின் அன்றாடத் தேவைக்கு பயன்படும் பொருள்கள், சேவைகள் மீது உள்ள ஜிஎஸ்டி வரி விகிதத்தை  5% உடன் குறைக்க வேண்டும்.


Popular posts
அரூர் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு ரூபாய் 100 மதிப்பில் காய்கறி அடங்கிய பை விற்பனையை உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் துவக்கி வைத்தார்
Image
தீர்த்தமலை ஊராட்சியில் TVS Srinivasan services trust சார்பாக கிருமி நாசினி தெளிக்கும் பணியை அரூர் சார் ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் அரூர் எம்எல்ஏ சம்பத்குமார் தொடங்கி வைத்தார்.
Image
கொடைக்கானல் அருகே கொரோனோ வைரஸ் நிவாரண பொருட்கள் குதிரைகள் கொண்டுசென்ற மலைக்கிராம மக்கள்
Image
திருடு போனதேக்கு மரம் பொறி வைத்து பிடித்த காவல்துறை
Image